தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் ரமணியம்மாள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார்.
அதற்கு பரிசாக அவருக்கு மனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வெகுகாலம் ஆகியும் அவர் பேருக்கு அந்த மனை பதியப் படவில்லை. என்ன காரணம் என்று ஆராய்ந்த போது ரமணியம்மாளிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் தான் தாமதத்திற்கு காரணம் என்று தெரிந்தது. அரசால் வழங்கப்படும் ஆதார், பேன் கார்டு போன்ற அடையாள அட்டைகளை சரியாக வைத்திருந்தால் எப்போதோ அவருக்கு மனை கிடைத்திருக்கும்.