பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பெயர் குறிப்பிடாமல் ஒரு அரசியல் தலைவர் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. எனக்கும் என் கட்சிக்கும் கெட்ட பெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்கள் யாரேனும் கூட இப்படி செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் நான் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சீமான் கூறினார்.