Mnadu News

செந்தில் பாலஜியின் மாவட்ட ஆட்சியர் மீதான புகாரை ஏற்க மறுத்த நீதிபதிகள்

கரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த 48 மணி நேரத்துக்கு முன்னதாக தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் அதிமுக கட்சி பிரமுகர் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு ஏப்ரல் 8 தேதிதான் விண்ணப்பித்திருந்தார். இதற்கு தேர்தல் அதிகாரியும் அனுமதி அளித்திருத்திருந்தார்.

மாவட்ட ஆட்சியருக்கும் கரூர் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியின் ஆடியோ கால் உரையாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் செந்தில் பாலாஜி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் முடிவடைந்தததால் செந்தில் பாலாஜியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Share this post with your friends