Mnadu News

சிரியாவில் கண்ணிவெடி வெடித்ததால் 7 குழந்தைகள் பலி

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.இந்த போரை பயன்படுத்தி சிரியாவுக்குள் நுழைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள டப்லான் நகரை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு உள்நாட்டு படையினர் அந்த நகரத்தை பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவித்தனர். இந்தநிலையில் அந்த நகரத்தில் பயங்கரவாதிகள் புதைத்து விட்டு சென்ற கண்ணிவெடி வெடித்ததில் 7 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 3 குழந்தைகள் பலியாகினர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டில் மட்டும் 140 குழந்தைகள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends