தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பெய்த ஐஸ் கட்டி மழை பொதுமக்களை அச்சம் கொள்ள செய்வதாக அமைந்து இருந்தது.தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராஜன்னா சிரிசில்லா, கரீம் நகர், சித்தி பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை அளவில் பெரிய ஐஸ் கட்டிகளுடன் கோடை மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது.
வழக்கத்தை விட பெரிய அளவிலான ஐஸ் கட்டிகளுடன் பெய்த கோடை மழையில் மா, கரும்பு, நெல்,வாழை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சிக்கி கடுமையாக சேதம் அடைந்தன.
இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவிலான ஐஸ் கட்டிகளுடன் பெய்த மழை காரணமாக கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் வீடுகள் ஆகியவையும் கடுமையாக சேதமடைந்தன. வழக்கத்துக்கு மாறாக பெய்த கோடை மழை பொதுமக்களை அச்சம் அடைய அமைந்திருந்தது.