சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியை காண கொல்கத்தா அணியின் உரிமையாளாரும் நடிகருமான ஷாருக்கான் வந்திருந்தார் .
ஷாருக்கான் அருகில் பிரபல இயக்குனரான அட்லியும், அவரது மனைவி ப்ரியாவும் அமர்ந்து போட்டியை ரசித்தனர். தற்போது அட்லி ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . இதனை படக்குழுவினர் மறுத்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அருகில் அமர்ந்து பேசியதை வைத்து, தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்க ஒரு பக்கம் யார் யார் நடிக்க போகிறார்கள் என்றும் ரசிகர்கள் குழப்பத்திலும் இருக்கிறார்கள் .