Mnadu News

தளபதி 63 படத்தில் ஷாருக்கான்

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி63   படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது நடிகர் ஷாருக்கான், அட்லியின் அலுவலகத்திற்கு சென்றார். இதனையடுத்து ஷாருக்கான் ‘தளபதி 63’ படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் இந்த செய்தி வதந்தி என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், தளபதி 63 படத்தில் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிப்பதாகவும். இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஷாருக்கான் 10 முதல் 15 நிமிடங்கள் திரையில் தோன்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பை மற்றும் சென்னையில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this post with your friends