Mnadu News

பிரபல இயக்குனருடன் இணையும் சாந்தனு பாக்யராஜ்

ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில், கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் ‘மதயானைக் கூட்டம்’. இந்த படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் தற்போது ‘ராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சாந்தனு நாயகனாக நடித்து வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்து விக்ரம் சுகுமாரன் கூறும்போது “சாந்தனு பாக்யராஜ் அவரது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு தயாராக மிகவும் கடுமையாக உழைப்பவர்.

அவர் இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகியின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More