Mnadu News

செம்மர கடத்தல் தடுப்பு ஆலோசனை கூட்டம்

ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு ஐஜி காந்தராவ் தலைமையிலான போலீசார், வேலூர் டிஐஜி காமினி மற்றும் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஏழை தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்து வரும் தரகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் இயங்கும் மாபியா கும்பலை கண்டறியவும் முடிவு செய்யப்பட்டது.மேலும் செம்மரம் வெட்ட வரும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்த பல ஆலோசனைகளை ஆந்திர சிறப்பு ஐஜி காந்தாராவ் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப் பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டி கடத்திச் சென்று சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார்கள் .

 

Share this post with your friends