நெல்லையப்பர் திருக்கோவிலின் ஆனி பெரு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது .நேற்றைய தினம் நெல்லையப்பர் திருக்கோவிலின் ஏழாவது நாளான திருவைபவம் நடைபெற்றது.நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந் திருவிழாவின் ஏழாவது நாளான நேற்று, பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும் , காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர். தாமிரசபை நடராஜர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தீபாராதனையை தொடர்ந்து, சுவாமி அம்பாள் நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், நால்வர் சண்டிகேஸ்வரரோடு வீதி உலாவும் நடைபெற்றது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More