நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வந்த ராஜாவா தான் வருவேன்’. இந்த படத்தில் சிம்பு பருமனாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து தனது உடல் எடையை குறைப்பதற்காக சிம்பு லண்டன் சென்றார். இந்நிலையில், சகோதரர் குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் சிம்பு லண்டனில் இருந்து சென்னை வந்துள்ளார்.
இன்று குறளரசனின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் இஸ்லாமிய முறைப்படி நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து வரும் 29ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தற்போது சிம்பு உடல் எடை குறைந்து காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.