வாட்ஸ் ஆப்பில் ஒரு பிரிவினர் குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றயத்திலும் மரங்களை வெட்டிப்போட்டு போராட்டம் மீனாட்சிபுரம், கே.புதுப்பட்டி, புழுதிபட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியலில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அரியலூரில் வன்னிய இளைஞர்கள் சேரிகளுக்குள் புகுந்து கடுமையானத் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்,இந்தியர் என ஒற்றுமை பேசும் இந்த தருணத்தில் தொடர்ந்து சாதிய மோதல்கள் நடைபெற்று வருகிறது.