சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து ‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் ‘2.0’, அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’, விஜய்யின் ‘தலைவா’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.