நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை தோற்கடித்த சென்னை அணி அட்டகாசமான வெற்றி அடைந்தது. இந்நிலையில் சென்னை அணிக்கு நாளை நடக்கவிருக்கும் ராஜஸ்தான் அணியுடனான போட்டி நடைபெற இருப்பதால் ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை அணி வீரர்கள் விமான நிலையத்தில் வந்தடைந்தனர்.
அப்பொழுது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் அவரது மனைவி சாக்சியும் விமான நிலையத்தின் தரையில் படுத்து உறங்கினர்.இந்த புகைப்படத்தை பதிவிட்ட தோனி அதிகாலையில் விமானம் இருந்தால் இப்படி தான் இருக்கும் என வேடிக்கையுடன் பதிவிட்டார் . இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது .
https://www.instagram.com/p/BwD9VVXFdJt/?utm_source=ig_twitter_share&igshid=19wt700qh7nny