Mnadu News

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சோனியா அகர்வால்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை, இயக்குனர் கவுதம் மேனன் இணைய தொடராக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொடரில் சசிகலாவாக நடிகை விஜி சந்திரசேகர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை சோனியா அகர்வால் நடித்து வருகிறார்.

Share this post with your friends