இயக்குனர் சிவராமன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘தனிமை’. நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் தீனா இசையமைத்திருக்கும் இந்த படத்தை புட் ஸ்டெப்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக சுந்தரவல்லி தயாரித்துள்ளார்.
இந்த படம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென மே 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.