Mnadu News

spirit of cricket அர்த்தம் என்ன

இந்த ஐபில் தொடக்கத்திலேயே அஸ்வின் பேசப்படும் பொருளாகவும் அதிகம் விமர்சிக்கப்படும் நபராகவும் இருக்கிறார் அதற்கு காரணம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பட்லரை அவர் அவுட் ஆக்கிய விதம் ஐசிசியின் 41 .16 விதியின் படி அஸ்வின் செய்தது சரியே, ஆனால் அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு , அஸ்வினை சீட்டர் என்று சொல்ல வேண்டும் , மற்ற நாடு முன்னாள் இந்நாள் விளையாட்டு வீரர்களும் ஏன் வசைபாட வேண்டும் , இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று அஸ்வின் மனைவி அவரின் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டதற்கு அதில் கமென்ட் பகுதியில் பலரும் சீட்டரின் மகள் என்று பதிவிடுவதெல்லாம் உச்சக்கட்டம் .

 

ஏன் இவ்வாறு அஸ்வினை சாடுகிறார்கள் என்று கேட்டால் spirit of Cricket கெட்டுவிட்டதாம், இதே போல் முன் அஸ்வின் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இப்படி செய்த போது அப்போது கேப்டனாக இருந்த சேவாக் அந்த விக்கெட்டை வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கூற அனைவரும் ஷேவாக்கை பாராட்டினார்.அதே சமயம் அஸ்வினை யாரும் இப்போது வசைபாடுவது போல் யாரும் செய்யவில்லை காரணம் அப்போது வேறு இப்பொது வேறு அவர் இப்பொது நன்றாக ஆடிய நபரை அவுட் ஆக்கியுள்ளார் அதனால் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது . அந்த அணியை விரும்பும் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

மேலும் நாம் முன்னர் குறிப்பிட்டது போல அந்த spirit of Cricket கெட்டுவிட்டதாக சொல்லும் சிலருக்கும் சில கேள்விகள் சேவாக் செய்ததை அஸ்வின் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை , எது Spirit of Cricket மற்றவரை வசைபாடி வெறுப்பேற்றி அவர்களை சீண்டி அவர்களை ஆட்டமிழக்க செய்வதா, இல்லை வைடு பந்தை வீசி பேட்ஸ்மேனை அவுட் செய்வதா இல்லை தொடர்ந்து பௌன்சர் பந்து வீசுவதா, அஸ்வின் இவ்வாறு செய்ததை பற்றி ட்விட்டரில் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா விடம் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் வார்னே கேட்டபோது அவரின் பதில் அஸ்வினுக்கு சாதகமாக இருந்ததால் நான் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என பதில் பதிவிடுகிறார் , அவர்கள் நாட்டினர் ஸ்லெட்ஜிங் செய்யும்போதோ , பந்தை சேதபடுத்தியபோதோ அதை பற்றி அவர்களுக்கு இந்த தண்டனை பெரியது, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் நிலை என்ன ஆகும் என அவர் நாட்டுக்கு ஆதரவாக பேசினார் அதே போல் ஹர்ஷா பேசினால் கோவப்படுகிறார்.

இத்தனைக்கும் அஸ்வின் விதியை மீறி எதுவும் செய்யவில்லை, Spirit of Cricket பற்றி பேசுவோர் எதெல்லாம் Spirit of கிரிக்கெட் என்று குறிப்பிடுவது உதவிகரமாக இருக்கும், இப்போது அஸ்வினை எதிர்க்கும் பலரும் ஸ்டீவ் ஸ்மித், வார்னரை ஆதரித்தனர் அவர்களின் தண்டனை பெரிது என்று கூறியவர்கள் ஆம் அவர்களுக்கு அந்த தண்டனை எவ்வளவு பெரியதோ அதே போல் இந்த தண்டனை அஸ்வினுக்கு பெரியது. இப்படி அனைவரும் எதிர்க்கும் விதி எதற்கு, ஐசிசி அந்த விதியை தூக்கி விடலாம் அல்லவா.

ஆட்டம் முடிந்த பிறகு நட்பு ரீதியாக அஸ்வின் பட்லரிடம் கைகுலுக்க செல்லும் போது அதை அவர் தவிர்த்து மட்டும் spirit of cricket தானா ?

இது அஸ்வினை ஆதரிக்கும் பதிவோ அல்லது பிறரை குறை சொல்வதற்காக உருவாக்கப்பட்ட பதிவு இல்லை அவர் செய்த செயலுக்கு நாம் கொடுக்கும் தண்டனை மிகவும் பெரியது மலினமான நடந்து கொள்ள வேண்டாம்.

Share this post with your friends