Mnadu News

இலங்கையிலிருந்து 600 பேர் நாடு கடத்தல்

இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு  இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாட்டினர் 600 பேரை அரசு அதிரடியாக இலங்கை அரசு நாடு கடத்தி உள்ளது. குண்டுவெடிப்பிற்கு பின் காவல்துறைக்கும் ராணுவத்துக்கும் கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில்இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருப்போர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வெளிநாடுகளை சேர்ந்த200 இஸ்லாமிய மதக்குருக்கள் உட்பட  600 பேரை இலங்கை அரசு அதிரடியாக நாடு கடத்தியது. விசா காலாவதியாகிய பின்னும் தங்கியிருந்த அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் வஜிரா அபய்வர்தனே தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More