Mnadu News

முதல் முறையாக விண்ணில் பாயும் இலங்கையின் ராவணா

உலகில் இருக்கும் பல நாடுகள் அவரவர் சார்பில்  பல பயன்பாட்டிற்காக விண்ணில் செயற்கைகோள்களை செலுத்தியுள்ளனர் .இதுவரை இலங்கை நாடு மட்டும் எந்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியது இல்லை .

இந்நிலையில் இலங்கையில் ராவணா 01 என்ற செயற்கைக்கோளை நாளை விண்ணில் செலுத்த உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது . இதற்கான கவுண்டன் தொடங்கிவிட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது .

இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஐயர்துன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிக என்ற மாணவியும் சேர்ந்து இந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர் .

இந்த செயற்கைகோள் பிரபல ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது .மற்ற நாடுகளை போல் இலங்கையும் முதலாவது செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது . இந்த செயற்கைக்கோளை எந்த பயன்பாட்டுக்காக அனுப்ப இருக்கிறார்கள் என்ற விவரங்களை இன்னும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை .

Share this post with your friends