Mnadu News

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும் என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம், மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதற்கு, கண்டனம் தெரிவித்தார். வேளாண் மண்டலத்தை சிதைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்ட மத்திய அரசு முடிவு செய்துவிட்டதா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் , வேளாண்மையை போற்றி, நாட்டின் நலனை வளர்த்தெடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார். அதேபோல், காவிரி ஆணையத்திற்கு உடனடியாக நிரந்தரத் தலைவர் நியமிப்பதோடு, இதுவரை ஆணையம் வெளியிட்ட இரு உத்தரவுகளின் அடிப்படையில் 40 புள்ளி 43 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share this post with your friends