ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ பெரியக்கருப்பன், ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதாக கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி தமிழகத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்களில் உரிய பராமரிப்பு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More