தூத்துக்குடியில் இருந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற மாபெரும் பேரணியில் தமிழக போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 13 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் எண்ணற்றோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதன்பின் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிரப்பித்தது. இந்தச் சூழலில் வேதாந்தா நிறுவனம் சார்பாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்து உத்திரவிட்டது.