தற்பொழுது மன அழுத்தம் நிறைந்து வரும் பணிகளுக்கு மத்தியில் அதை போக்க பல்வேறு வழிகளை மக்கள் தேடி வருகின்றனர்.அந்த வகையில், தமிழகத்தில் மன அழுத்தம் நிறைந்த பணிகளில் முக்கியமானதாக கருதப்படும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இரு பெண் காவலர்கள், தங்களின் மனசோர்வு நீங்குவதற்காக மெரீனா கடற்கரையில் உற்சாகமாக நடனமாடி டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.சமீப காலமாக டிக் டாக் வீடியோ மூலம் மன அழுத்தம் குறையும் என பலர் வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கமானவைகளில் ஒன்றாக உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More