தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்த பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் அவர்களை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More