துருக்கியில் பாலம் இடிந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. துருக்கியில் கருங்கடலுக்கு அருகே உள்ள டெர்மே நகரில் கனமழை பெய்ததையடுத்து நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று திடீரென பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. பாலத்தைக் கடந்து சென்ற பாதசாரிகளோடு, அங்கிருந்து காரும் நீரில் விழுந்தன.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.விபத்துக்கு சற்று முன் அந்த பாலத்தைக் கடந்தவர் நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து நின்றதும் அந்த காட்சியில் பதிவாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் சிக்கிய இருவரும் காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.