Mnadu News

முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா விசாரிக்க மறுப்பு

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .முன்ஜாமின் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் அவர்கள்
மனு தாக்கல் செய்துள்ள நிலையில்,ஐ.என்.எக்​ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

சிதம்பரத்துக்கு முன்ஜாமின் இல்லை எனவும் மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .நேற்று இரவு கூட ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என சிபிஐ அமலாக்கத்துறை முயற்சித்தார்கள்என கபில்சிபல் வாதாடியுளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.மேலும் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .தலைமை நீதிபதி மற்றொரு வழக்கை விசாரித்து வருவதால் ப.சிதம்பரம் மனுவை வேறு அமர்வுக்கு அனுப்பிவைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது .மேலும் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ரமணா விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More