நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த வாரம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த வரும் அபர்ணா பாலமுரளி தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் குனித் மோங்கா கூறியுள்ளதாவது “தமிழ் சினிமாவில் எங்களது பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. நமது நாட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/BwSC4a9Hq7I/?utm_source=ig_embed