Mnadu News

தல 60′ படத்தில் மீண்டும் இணையும் கூட்டணி

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நடிகர் அஜித்தின் 59வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அஜித்தின் படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கி வரும் ஹெச்.வினோத் அஜித்தின் 60வது படத்தையும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends