நாளை நடைபெறவிருக்கும் தபால்துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் நாளை நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்த தேர்வு தமிழ் உட்பட 15 மொழிகளிலும் நடத்தப்பட்டது.தென் மாநிலங்களில் உள்ளவர்கள் மத்திய அரசுப் பணிகளில் யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்கான சதி இது என விமர்சித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசின் தபால் துறை, மாநில மொழிகளை அலட்சிம் செய்யும் வகையில், செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்வு முறை தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தினார். உடனடியாக இந்த அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால், தி.மு.க வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்