மத்திய சென்னை மக்களவை தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளரான தயாநிதி மாறன், நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலை திமுக எம்பிக்கள் எதிரொலிப்போம் என கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்காக 38 எம்பிக்கள் இருந்தும், நம் மாநிலம் புறக்கணிக்கப்பட்டது. தமிழகத்துக்கு பெரும் தீங்கிழைக்கப்பட்டது. ஆனால் இனி அந்த நிலை இருக்காது என உறுதியளிப்பதாக கூறினார்.
தமிழகத்தின் நலனே எங்கள் முதல் கோரிக்கை. மக்கள் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் தமிழக மக்கள் ஏன் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை புறக்கணித்தனர் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். கடந்த 5 வருட ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை அவர்களும் அறிவார்கள். இனி அந்த நிலை தொடர கூடாது. தமிழகத்துக்கு முன்னுரிமை தர வேண்டும். அதுவே எங்களின் கோரிக்கை என வலியுறுத்தினார் .