Mnadu News

சர்வதேச கராத்தே போட்டியில் தமிழக மாணவிகள் சாதனை…

சென்னை ஆவடியைச் சேர்ந்த 12 மாணவ மாணவிகள் உலக அளவிலான திறந்த நிலை கராத்தே போட்டியில் கலந்துகொண்டு 24 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்ற சர்வதேச அளவிலான திறந்தநிலை கராத்தே போட்டியில் 5 நாடுகளை சேர்ந்த சுமார் 3000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சென்னை ஆவடியில் உள்ள செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 மாணவ மாணவிகள் இரட்டை தங்கம் வென்று 24 தங்கம், சான்றிதழ்கள், கோப்பைகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இந்த போட்டியில் பல சவால்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளதாகவும், தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கராத்தே பயிற்சியாளர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More