சென்னை தாம்பரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது. கோட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் தங்களை அழைக்காமல் எப்படி ஜமாபந்தி நடத்தலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த போது இரண்டு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த கலவரத்தின் போது அருகிலிருந்த நாற்காலிகள தூக்கி வீசியதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.இதை தொடர்ந்து அதிகாரிகள் ஜமாபந்தி நடத்தாமல் அறைக்கு சென்றனர். பதற்றத்தை தணிக்கும் வகையில் தாம்பரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More