திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதர்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி அவர்கள் ஆழ்வார் தோப்பு, காயிதேமில்லத் நகர், உமர்நகர், உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ராகுல்காந்தி அவர்கள் பிரதமரானால் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல வருடத்திற்கு ரூ.72,000 கிடைப்பது உறுதி என்றும் நாட்டில் ஒற்றுமையாக வாழும் மக்களை மதத்தின் பெயரில் பிரிவினையை ஏற்படுத்தி பிளவை ஏற்படுத்த பாஜாக முயல்வதாகவும் தமீம் அன்சாரி குற்றம்சாட்டினார். இந்த பிரச்சாரத்தின் போது திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.