Mnadu News

தல என்ற பெயருக்கு தோணி கூறிய பதில் …

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதின . தொடக்கத்தில் பேட்டிங் செய்த சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமாக வெற்றி அடைந்தனர் . அதோடு மட்டுமல்லாமல் தோணி பங்கேற்பாரா என்ற சந்தேகத்துடன் இருந்த நிலையில் தோணி பங்கேற்றது ரசிகர்களை மேலும் குஷியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.தோனியிடம் ஏன் உங்களை எல்லாரும் தல என்று அழைக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கும் இது புதிதாகதான் இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டைட்டில் பாடலில் கூட தல தோனிக்கு என்று வரும். அப்போது எனக்கு என்னவென்று புரியவில்லை.ஆனால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் என்னை தோனி என்று அழைப்பதில்லை, தல என்றுதான் அழைக்கிறார்கள். நானும் அவர்களின் அன்பைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டேன். எனக்கு மட்டுமல்ல மற்ற வீரர்களுக்கும் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஊக்கம் அளிக்கின்றனர். அதுதான் எங்களின் பலம், நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறோம்” என்றார்.

Share this post with your friends