நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன்-2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.சந்திராயன்-2 பயணத்தில் இன்று காலை 9 மணியளவில் மேலும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.நிலவின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி துல்லியமாக சந்திராயன்-2 செலுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.
காலை 9 மணிக்கு தொடங்கி, சுமார் 30 நிமிடங்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திராயன்-2 செலுத்தப்பட்டது.நிலவை தற்போது நீள்வட்டப்பாதையில் சந்திராயன்-2 சுற்றி வருகிறது.வரும் 28, 30, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சந்திராயன்-2 மேலும் நிலவை நெருங்கிச்செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு லேண்டர் விக்ரம் நிலவில் தறையிறங்கத் தொடங்கி 1.55 மணிக்கு தரையிறங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கத் திட்டம்.