நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிக்கிடையே மோதல் நடைபெற்றது.இந்நிலையில் ,முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரெய்னா 59 ரன்களும், டூ பிளெசிஸ் 39 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் 15 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சென்னை அணி, கடைசி 5 ஓவர்களில் 77 ரன்கள் குவித்தது.
#Thala's roaring numbers at Chepauk while tackling Delhi! Here's wishing him loads of Thirumba Vandhutten nu Sollu Moments tonight at the #Den! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/7JLpnZb0Uc
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2019
அடுத்துக் களமிறங்கி டெல்லி அணி, சென்னை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோனி, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் அட்டகாசமாக ஸ்டம்பிங் செய்தார்.
#AnbuDen Thala! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/CJ8mxvW7Bc
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2019