பதினெட்டாவது நாளான இன்று அத்திவரதருக்கு கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் பெரும்பாலான மக்கள் தரிசனத்தை தவிர்த்துவிட்ட நிலையில் நேற்று கூட்டம் வரவில்லை.ஆனால்,இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.கூட்டத்தை தடுக்க தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து 30 க்கும் அதிகமான பேருந்துகளில் மக்கள் கோவிலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். வெளியூர் வாகனங்களை ஊருக்குள் கொண்டுவர வேண்டாம் என்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு மினி பேருந்துகளில் கோவிலுக்கு வருமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More