Mnadu News

இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன . டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது .

இந்நிலையில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணி தடுமாறியது அவ்வப்போது வீரர்களின் பௌண்டரிகள் ஆஸ்திரேலியா அணியின் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது இந்நிலையில் 49 ஒவேரில் ஆஸ்திரேலியா அணி ஆல்அவுட் ஆகி 223 ரன்கள் மட்டுமே எடுத்தது .

இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உச்சமாக களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்நிலையில் 32 ஆவது ஒவேரில் இங்கிலாந்து அணி 226 ரன்கள் எடுத்தால் அபார வெற்றி பெற்றது .

இந்நிலையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது .

Share this post with your friends