கிராம பின்னணியில் உருவான ‘வம்சம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. இவர் நடிப்பில் வெளிவந்த ‘டிமான்டி காலனி’, ‘மெளனகுரு’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் , நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர் .மேலும் இந்த படமும் ஒரு வித்யாசமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .