இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் ‘பேட்ட’. இந்த படம் அனைவரது மத்தியிலும் மிக பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “பரத் நடித்த ‘காளிதாஸ்’ படத்தை பற்றி ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார் .
காளிதாஸ் படத்தை காணுகின்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் உருவாக்கம் கவனத்தை ஈர்த்தது. இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக்கூடிய திரில்லர் படமான இது நடிகர் பரத்திற்கு ஒரு நல்ல கம்பேக் படமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.