Mnadu News

தர்பார் படத்தில் இணைந்த ‘காலா’ பிரபலம்

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் ‘தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இணையும் நடிகர், நடிகையர் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களும் வெளியாகிவருகிறது. இந்நிலையில், ‘தர்பார்’ படத்தில் நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பிரதீப் காப்ரா நடிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே ரஜினியின் ‘காலா’ படத்தில் நானா படேகரின் உதவியாளராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends