கரும்புக்கான தொகையை தரவில்லை எனக் கூறி, சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டின் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரும்புக்கான நிலுவைத் தொகையை தரவில்லை எனக் கூறி, தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கும் ஆருரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர் ராம் தியாகராஜனை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிச்சை எடுக்கும் போரட்டத்தில் ஈடுப்பட்டனர். 420 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து குடியிருப்பு பகுதியில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.