ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். ஹிந்தி பதிப்பில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘லக்ஷ்மி பாம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.