முன்னணி நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில், இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.
மலேஷியாவில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது பின்ணணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் முதலாவது பாடல் வரும் மே மாதம் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.