Mnadu News

தீயணைப்பு வீரர்களுக்கு கௌரவம் அளித்த பிரான்ஸ் அரசு

பிரான்ஸ் நாட்டில் பழங்கால சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் புனித டாம் தேவாலயம் சமீபத்தில் பெரிய தீவிபத்தில் சிக்கியது.தீப்பிடித்ததை அறிந்த தீயணைப்பு வீரர்கள் 500 மேற்பட்டோர் அரைமணிநேரத்துக்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் .மிகவும் வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் அந்த தேவாலயத்துக்கு அங்கு இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய கலைப் பொருட்களுக்கும் சேதமடையவிடாது பாதுகாத்தனர் .

உயிரை பணயம் வைத்து தேவாலயத்தை தீ விபத்தில் இருந்து காப்பாத்திய தீயணைப்பு படையினருக்கு கெளரவிக்கும் விழா, பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில், இமானுவல் மேக்ரான் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் தீயணைப்பு வீரர்களும் கலந்துகொண்டனர் மேலும் அந்த விழாவில் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறும் வகையிலும் அவர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன .

Share this post with your friends