ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பரிந்துரையில் அடிப்படையில் ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும், ஆளுநருக்கு சட்டப்பாதுகாப்பு இருப்பதால் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த மனு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More