திருப்பூர் ஆண்டிபாளையம் அருகே அருள் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ரத்தம் சொட்ட சொட்ட வடமாநில இளைஞர் ஒருவர் ஓடி வந்துள்ளார். இதையடுத்து அவரை துரத்திக்கொண்டு பின்னால் ஓடி வந்த கும்பலை அருண்குமார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருள்குமார் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக குத்திவிட்டு அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அருள்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஐந்து பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சி உதவியுடன் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More