இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 18-ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் சேர்க்கை உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மாணவர்களின் பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகேயுள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More