பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இவர் இயக்கிய ஆரண்யகாண்டம் படமும் வித்தியாசமான கதையம்சத்தை கொண்டதால் வெற்றிகரமாக ஓடியது .
சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருப்பார் மேலும் பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள் .
இந்த படத்தை பலர் பாராட்டியும் பலர் விமர்சித்தும் வந்தனர் . இந்நிலையில் பிரபல இயக்குனரான சேரன் சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றியும் நடிகர் விஜய்சேதுபதி பத்தியும் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் எதை பற்றியும் கவலை படாமல் தனது தொழில் மேல் உள்ள பக்தியாலும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தாலும் அவர் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நடிகர் விஜய்சேதுபதிக்கு பெரிய சல்யூட்.அதன் பின் விஜய்சேதுபதி இன்னொரு சிவாஜி என்றும் புகழ்ந்துள்ளார் மேலும் இந்த படத்தின் கதை திரைக்கதை ஒளிப்பதிவு அனைத்தும் ரசிக்கும் வகையிலும் இது போன்ற தரமான படங்கள் நிறைய வரவேண்டும் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார் .