இலங்கையில் நேற்று 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடுப்புகள் நடந்தன . மக்கள் அதிகம் காணப்படும் 8 இடங்களில் தீவிரவாதிகளால் பெரிய குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது .எஸ்டர் நாளான நேற்று
கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.
இந்த நாசா சம்பவத்தால் இதுவரை நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் பலியானதாகவும் 500 மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது .இந்த குண்டுவெடிப்பில் பல வெளிநாட்டினரும் இந்தியர்களும் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நடந்த இந்த குண்டுவெடிப்பில் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை .